சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளிங்கத்தை கடுமையாக அவமதித்தாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நிலையியற் கட்டளைகளின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுஅவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளிங்கத்தை கடுமையாக அவமதிக்கும் வகையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து, பொருத்தமான நிலையியற் கட்டளையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபாநாயகரை நான் கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கையை முன்வைத்தார்.
