கொழும்பு, கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு துப்பாக்கிதாரிகள் லொரியில் வந்து நடாத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுடையவர்களே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
காயமடைந்த இருவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான மோதர நிபுனவின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மற்றும் இந்த துப்பாக்கிச் சூடு மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சேதாவத்த கசுனின் ஆதரவு பிரிவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
