விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணம் கிடைக்கப் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்னவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அனுராதபுர மாவட்டத்தில் மட்டும் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணமான 2,934,310 ரூபாய் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஒரு பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சில விவசாயிகளின் உர மானியப் பணம் மாயமாகியது தொடர்பாக ற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
