இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது!

குருநாகல் – பௌத்தலோக பகுதியில் இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வடமேல் மாகாண சபையின் மாகாண வருமான திணைக்களத்தில் பணிபுரியும் மதிப்பீட்டு அதிகாரி ஆவார்.

முறைப்பாட்டாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அறுதி காணி தொடர்பான பத்திரத்திற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தொகையை குறைப்பதற்காக 50,000 ரூபாய் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் குறித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply