உடலில் பச்சை குத்தியிருப்பவர்களை பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த ஒருவர் ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், உடலில் பச்சை குத்தியிருப்பாரானால் வருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல். அந்த தோலை அழிப்பது நல்லதல்ல. நாம் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
எனவே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், உடலில் பச்சை குத்தியிருப்போர் எவராயினும், எந்த ஆயுதப் படையிலும் இணைய வாய்ப்பு கிடைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
