உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (19) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி ஆரம்பமானது.
கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை காலம் மார்ச் 19 உடன் நிறைவடையும் என்றும், எக்காரணம் கொண்டும் இந்த இறுதி தினம் நீட்டிக்கப்படாது என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், அதன் கால
அவகாசமும் நாளை (20) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, நாளை நண்பகல் 12.00 மணி முதல் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஒன்றரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் பின்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது.
