குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திர என்பவராவார்.
அவர் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணம் நயினாதீவிற்கு சுற்றுப்பணம் மேற்கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த அவரது மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் இரண்டு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
