முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை பறிமுதல் செய்தமை தொடர்பாக நீதிமன்றத்திற்கு சாட்சியங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு இன்று (19) மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் இதற்கிடையில் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் குறித்த சம்பவம் தொடர்பாக விசேட அறிக்கையை வெளியிட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், முன்னாள் பொலிஸ் மா தேசபந்து தென்னகோனின் வீட்டில் இருந்து 795 மதுபான போத்தல்கள், 214 வயின் மதுபான போத்தல்கள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரு ஐ போன்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் மூலம் அநேக தகவல்கள் வெளிப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
