விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன்!

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் (28) உத்தரவிட்டது.

இந்த நிலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை, நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்க, மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply