2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு நேற்று முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்தது.
தமது பிரச்சினை தொடர்பில், நிதியமைச்சின் அதிகாரிகளுடன் மார்ச் 17ஆம் திகதி பேசித் தீர்க்க முற்பட்ட போதிலும் அதற்குரிய தீர்வு கிடைக்கவில்லை எனச் சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தமது பிரச்சினைகளுக்குரிய தீர்வு கிடைக்கவில்லையாயின் சகல சுகாதார தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
