எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20) நண்பகல் 12:00 மணியுடன் நிறைவடைகின்றன.
கடந்த 17 ஆம் திகதி 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகிய நிலையில், இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
