சட்டபூர்வமாக ராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடங்கப்பட்டன.
பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று (19) வரையில், சட்டபூர்வமாக ராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற 1,604 முப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது1,444 பேரும், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 1,394 பேர் இராணுவ வீரர்களாக காணப்படுவதுடன், 138 பேர் விமானப்படை வீரர்களாகவும், 72 பேர் கடற்படை வீரர்களாகவும் உள்ளனர்.
