ரயிலும், காரும் மோதி விபத்து!

களனிவெளி ரயில் மார்க்கத்தில் அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், சொகுசு கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பாதுக்கை, லியன்வல, துத்திரிபிட்டிய பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரயில் கடவைக்குள் நுழைய முயன்ற போது குறித்த சொகுசு கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் ரயில் கடவையில் கடமையில் இருந்த நபர் சம்பவ இடத்தில் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாதுகாப்பு கடவை மூடப்படாமல் இருந்தமை தெரியவந்துள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது கார் சாரதி சிறு காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில்,பாதுக்கை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய ரயில், காலையில் களனிவௌி ரயில் மார்க்கத்தில் பயணித்த இறுதி ரயில் என்றும், ரயில் இயந்திரம் மீண்டும் இயங்காததால் விபத்துக்குப் பிறகு ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டதாகவும் பாதுக்கை ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply