உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20) நண்பகல் 12:00 மணியுடன் நிறைவடைந்திருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
