மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (20) இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு. ஜி.ஜே.குணதிலக அவர்களின் கீழ் இயங்கும் காவல்துறையினரால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
27 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞனிடம் இருந்து 290 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
