கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம்- மற்றுமொரு சந்தேக நபர் கைது!

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த சந்தேகநபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply