யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில், சுகவீனம் காரணமாக அமரத்துவமடைந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற (21) பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது, சுபீனா குணரத்னம் என்ற மாணவி கலைமாணிப் பட்டத்துக்கு உரித்துடையவராக்கப்பட்டமையை உறுதிப்படுத்தி தேகாந்த நிலையில் அவரது பட்டம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த வேளையில் பெற்றோர் பட்டம் பெற்ற அந்தத் தருணம் உணர்ச்சி மிகுந்ததாக பார்க்கப்பட்டது.
