கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு பாடசாலை செல்லும் இரு பிள்ளைகள் (மகள் 11 வயது – மகன் 13 வயது) இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவன் ரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரத்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
