யாழ் இருபாலை இந்து மயானத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து ஐஸ் போதை பொருளை பொலிஸார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணை பொலிஸார் யாழ் . நீதிமன்றில் முற்படுத்தியதை தொடர்ந்து, பெண்ணை 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
