தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply