ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 500 விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதன்படி புதிய உறுப்பினர்கள் தங்கள் படிப்புகளை நிறைவு செய்து விரைவில் சேவைக்கு வருகை தருவார்கள் என ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும் தென் மாகாணத்தில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த 4 பொலிஸ் குழுக்கள் மற்றும் அம்பலாங்கொடை பிரதேசத்திலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக இரண்டு விசேட பொலிஸ் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
