மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்க நடவடிக்கை!

மகாபொல உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பில் தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தலைமையில் நேற்று (24) இசுருபாய கல்வி அமைச்சின் வளாகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்ன உள்ளிட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் மகாபொல அறக்கட்டளை நிதியத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் போது 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவு கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை குறைக்க எடுக்கக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகள் மற்றும் ஏனைய ஆண்டு மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply