தேர்தல் ஆணைக்குழு அரசிடம் கோரிக்கை!

தேர்தல் காலத்தில் அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும் என அரசிடம் அறிவுறுத்தி உள்ளது.

அரசின் இந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆணைக்குழு மறு ஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

அத்துடன் இந்த திட்டங்களில் தேர்தலுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய திட்டங்கள் ஏதும் இருப்பின், அவற்றை தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் காலப் பகுதியில் அமைச்சரவையால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, ஆணைக்குழு அந்த தீர்மானங்களை மறு ஆய்வு செய்து அது தொடர்பாக அரசாங்கத்திற்கு அறிவிக்கும் நடைமுறை பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply