நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம், நாட்டின் பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். அதற்காக ஒரு விசேட வேலைத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
நாட்டில் இடம்பெறுவது பாதாள குழுக்களுக்கு இடையிலான மோதலாக உள்ளது. ஆனால் அதனால் தேசிய பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பு இல்லை. எங்கள் பொது பாதுகாப்பு அமைச்சு அதற்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
