மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
தற்போது அவருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் தனது உணவை வீட்டிலிருந்து கொண்டு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து, அந்தக் கோரிக்கையை பரிசீலித்த சிறைச்சாலைத் திணைக்களம், அவருக்கு மூன்று வேளை உணவையும் வீட்டிலிருந்து கொண்டு வர அனுமதி வழங்கியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நேற்று (24) முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
