மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (25) பிற்பகல் 12.15 மணிக்கு நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தியினரால் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
