கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றின் முன் கடந்த மார்ச் 22 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் கொடுப்பதற்காக யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.
குறித்த விடுதியின் முன் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் யோஷித ராஜபக்ஷவுடன் வந்த குழுவினர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதல் சம்பவத்தில் ஒரு பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டு காயமடைந்ததாகவும், காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களை பொலிசார் அடையாளம் கண்டுள்ள போதும், குறித்த சந்தேக நபர்கள் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த மொத சம்பவம் தொடர்பில் யோஷித மற்றும் அவரது மனைவி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
