14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய நபர் கைது!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற, 33 வயதுடைய நபர் ஒருவர் மொனராகலை பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் பொலிஸில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இருவரும் எம்பிலிபிட்டியவிலிருந்து மொனராகலைக்கு வரும் பேருந்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply