பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம் ஒன்றினுள் வசித்து வந்த 69 வயதுடைய பிக்குவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

குறித்த பிக்குவை சந்திப்பதற்காக நபரொருவரும் மற்றும் வேறொரு விகாரையைச் சேர்ந்த பிக்குவும் வந்தவேளை, பிக்கு இறந்து கிடப்பதை கண்டு எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து எப்பாவல பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த போது, பிக்குவிற்கு முச்சக்கர வண்டி மற்றும் சாரதி ஒருவர் இருப்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த சாரதி தற்போது மடாலயத்தில் இல்லை என்பதுடன், முச்சக்கர வண்டி சாரதி பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையை செய்தவர்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply