ஜனாதிபதி செயலகத்திற்குள் துப்பாக்கி தோட்டாவை எடுத்துச் சென்ற இராணுவ வீரர்!

ஜனாதிபதி செயலகத்திற்குள் துப்பாக்கி தோட்டாவை மறைத்து வைத்துக் கொண்டு உள்நுழைய முற்பட்ட இராணுவ வீரர் ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றி வருவதுடன், இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ வீரர் கடந்த 20 ஆம் திகதி விடுமுறை பெற்று லுனுகம்வெஹெரவில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.

அதன்போது ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், சிப்பாயின் பையை சரிபார்க்க ஸ்கேனர் ஒன்றைப் பயன்படுத்திய வேளையில், பையில் T-56 துப்பாக்கிக்கான தோட்டா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply