ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் இளைஞன் ஒருவர் நேற்றைய (25) தினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
