கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்- வவுனியாவில் சம்பவம்!

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply