கிழக்கு மாகாணத்தில் செயல்படும் தீவிரவாதக் குழு குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்றைய தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் செயல்படும் தீவிரவாதக் குழு குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர்.
இந்தப் பகுதியில் செயல்படும் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு குறித்து தகவல் கிடைத்துள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் குழு பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய பொலிஸார், புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்த அமைசர் நளிந்த ஜெயதிஸ்ஸ இந்த விடயம் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சில தகவல்களை வழங்கியதாக மேலும் தெரிவித்திருந்தார்.
