எல்லை தாண்டி மீன்பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அழைத்துவரப்பட்டு, பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைதான மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply