யாழில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான கஞ்சா பொதிகள்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் இன்று (27) கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 33 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா பொதிகள் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் அவற்றை ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது கைது செய்யப்படவில்லை என்பதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply