உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் திரப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஞ்சிகுளம் சந்திக்கு அருகில் வைத்து நேற்று (26) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரப்பனை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திரப்பனை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
