நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
