பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று (27) காலை விசாரணை நடாத்தி வந்தனர்.
சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நடாத்தப்பட்ட விசாரணையில், சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளமை தெரியவந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
