ஒலுவில் துறைமுக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்- கடல் வளங்கள் அமைச்சர்!

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்று (26) கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டு துறைமுகத்தை பார்வையிட்டதுடன், பல தரப்பினருடனும் சந்திப்புகளில் ஈடுபட்டு கருத்துகளை கேட்டறிந்து கொண்டார்.

இதன்போதே, கைவிடப்பட்டுள்ள நிலையில் இருக்கும் ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளதுடன், இதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply