கொழும்பு களியாட்ட விடுதி சம்பவம்- சரணடைந்தவர்களுக்கு விளக்கமறியல்!

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற நான்கு பேர் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் நேற்று (26) சரணடைந்தனர்.

மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply