உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை செலவிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
