க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனையில் வசித்து வந்த 16 வயதுடைய மாணவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (26) பாடசாலை சீருடையை அணிந்து, மஹியங்கனை தம்பராவ பரீட்சை மையத்திற்கு தேர்வு எழுதச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறிய மாணவர்கள் இருவரும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் மஹியங்கனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
