நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் போராட்டம்- 27 பேர் கைது!

நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் நேற்று இரவு மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று பிற்பகல் இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 8 பிரதிநிதிகளுக்கு சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், அது தோல்வியடைந்ததால் அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் பற்றி பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்த போது, சுகாதார அமைச்சுக்கு முன்னாள் ஒன்றுகூடுவதற்கு தடை விதித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தவேளை, நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் 27 பேர் நேற்று இரவு மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply