நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று (27) காலை விசாரணை நடாத்தி வந்தனர்.

சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நடாத்தப்பட்ட விசாரணையில், சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளமை தெரியவந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாமர சம்பத் தசநாயக்க மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

இந்நிலையில் இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply