அனுராதபுரம் வைத்தியசாலை விவகாரம்- அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்!

அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.

இதன்போது பெண் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர், புகார்தாரரான வைத்தியரால் இன்று (28) அடையாளம் காணப்பட்டார்.

குறித்த வழக்கு தொடர்பில் பாதிக்கப்பட்ட வைத்தியர் கடந்த இரண்டு தடவைகளில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த வைத்தியர் இன்று நீதிமன்றுக்கு வருகை தந்ததுடன் சந்தேக நபர் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் சந்தேகநபர் இன்று அடையாளம் காணப்பட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply