குடாமடுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

தொடுவாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாமடுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தொடுவாவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (28) மாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் யார் என்பது தொடர்பிலான விபரங்கள் எதுவும் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் , சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில்லான மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply