தமிழர் பகுதிகளில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை!

காவல்துறையினரின் அராஜகங்களுக்கு எதிராக நடவடிகைகள் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இடம்பெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள், “அண்மை காலமாக காவல்துறையினரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட காவல்துறையினர் நெல்லியடியில் ஒரு வீட்டுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகி இருந்தது. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள்?” என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா பதிலளிக்கையில்,

காவல்துறையினருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் காவல்துறையினர் சில இடங்களில் தாங்கள் நினைத்தபடிதான் நடந்துகொண்டு இருக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தால் அந்த காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்” என அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply