பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
கடந்த பெப்ரவரி 17 முதல், மார்ச் மாதம் 19 வரையான காலப்பகுதியில் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருப்பதற்காக குறித்த இருவரும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிமன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும் அவர் நீதிமன்றை தவிர்த்த காரணத்தால், மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
அதன் பின்பு, 20 நாட்கள் தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் மார்ச் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி 17 முதல் மார்ச் மாதம் 19 வரையான காலப்பகுதியில் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருப்பதற்கு விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் உதவியுள்ளனர்.
இதனால் குறித்த இருவரும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
