புதுக்குடியிருப்பில் அரச உத்தியோகத்தரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைபொருள்!

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கிராம சேவையாளர் ஆவார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட போது குறித்த நபரின் உடமையில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளை தொடர்ந்து வைத்திய பரிசோதனையின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

குறித்த சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கிராம சேவையாளராக பணியாற்றிய போது ஐஸ் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையான பின்னர் கிராம சேவையாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply