Wild Cookbook என்ற பிரபல யூடியூப் தளத்தை இயக்கி வரும் சரித் என். சில்வா என்ற தனிநபர் 10 மில்லியன் யூடியூப் சந்தாதாரர்களை (Subscribers) இணை கடந்த முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2020ஆம் ஆண்டு முதல் Wild Cookbook என்ற யூடியூப் தளத்தை இயக்கி வரும் சரித் என். சில்வா இதுவரையில் 605 காணொளிகளை பதிவிட்டுள்ளார்.
சரித் என். சில்வா தனக்கே உரிய பாணியில் தனித்துவமாக விதவிதமான சமையல் காணொளிகளை தனது தளத்தில் பதிவேற்றி வருகின்றார். அவரது காணொளிகள் உலகளாவிய ரீதியில் பல லட்சம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அவரது Wild Cookbook என்ற யூடியூப் தளமானது நேற்றைய தினம் 10 மில்லியன் சந்தாதாரர்களை (Subscribers) எட்டியுள்ளது.
இலங்கை யூடியூப் வரலாற்றில் இதுவொரு மைல்கல் என அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறார்.
